மக்கள் பயன்பாட்டிற்கு வராத திட்டங்கள் நெல்லிக்குப்பம் நகராட்சியில் அவலம்
நெல்லிக்குப்பம் நகராட்சியில் ஏழை மக்கள் பயன்பாட்டிற்காக, ஆலை ரோட்டில் ரயில் நிலையம் அருகே 10 ஆண்டுகளுக்கு முன்பு ரூ. 60 லட்சம் மதிப்பில் திருமண மண்டபம் கட்டபட்டது. ஆனால் அதிகாரிகள் அலட்சியத்தால் இதுவரை பயன்பாட்டுக்கு வரவில்லை. தற்போது இந்த மண்டபம், தூய்மை பணியாளர்களுககு வேலை பிரித்து வழங்கும் அலுவலகமாக பயன்படுத்துகின்றனர். அதேபோல் ரூ. 1 கோடிக்கு மேல் செலவு செய்து கட்டப்பட்ட சுகாதார வளாகங்களும் பல இடங்களில் திறக்கப்படவில்லை. மக்கும் குப்பையில் இருந்து உரம் தயாரிக்க பல லட்சம் செலவில் வான்பாக்கம் உட்பட பல இடங்களில் கட்டப்பட்ட கட்டடங்கள் வீணாகி வருகிறது. ரூ. 1 கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வரவில்லை. குப்பையில் இருந்து உரம் தயாரிக்க மேல்பாதியில் ரூ. 1 கோடியில் ஏற்பாடு செய்த சிமண்ட் களத்தில் ஒரு நாள் கூட உரம் தயாரிக்கவில்லை. இப்படியாக, நெல்லிக்குப்பம் நகராட்சியில் பல திட்டங்கள் செயல்பாட்டுக்கு வராமலேயே மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் நேரடியாக ஆய்வு செய்து பயன்பாட்டுக்கு வராத திட்டங்களை செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும்.