| ADDED : மே 03, 2024 11:42 PM
கடலுார், - கடலுார் லாயர்ஸ் அசோசியேஷனின் புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றனர்.கடலுார் லாயர்ஸ் அசோசியேஷன் தேர்தல் நடந்தது. மூத்த வழக்கறிஞர்கள் சிவராஜ், வனராசு, ராமநாதன், ராம்சிங், சிவசிதம்பரம் முன்னிலை வகித்தனர். இதில், லாயர்ஸ் அசோசியேஷன் தலைவராக அமுதவள்ளி, செயலாளராக கார்த்திகேயன், துணை தலைவராக வேலன், பொருளாளர் அறவாழி, இணை செயலாளராக நாகவேந்தன் தேர்வு செய்யப்பட்டனர்.இதையடுத்து லாயர்ஸ் அசோசியேஷன் தலைவர் அமுதவள்ளி உள்ளிட்ட நிர்வாகிகள் நேற்று சங்க அலுவலகத்தில் பொறுப்பேற்றனர். முதல்முறையாக லாயர்ஸ் அசோசியேஷன் தலைவராக பெண் வழக்கறிஞர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.