உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிருஷ்ணர் கோவிலில் புது கொடிமரம் அமைப்பு

கிருஷ்ணர் கோவிலில் புது கொடிமரம் அமைப்பு

கடலுார்: கடலுார், முதுநகர் கிருஷ்ணர் கோவிலில், நேற்று புதிய கொடிமரம் நிறுவும் நிகழ்ச்சி மற்றும் லட்சுமி சுதர்சன ஹோமம் நடந்தது.விழாவையொட்டி, காலை 7:00 மணிக்கு கும்ப ஸ்தாபனம், எந்திர பிரதிஷ்டை, லட்சுமி சுதர்சன ஹோமம் நடந்தது. காலை 9:00 மணியளவில் மகா பூர்ணாஹூதி, காலை 10:00 மணியளவில் புதிய கொடிமரம் நிறுவுதல், காலை 10:30 மணியளவில் கொடி மரத்திற்கு புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை