உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி

ஓசோன் தின விழிப்புணர்வு பேரணி

சிதம்பரம்: அண்ணாமலைப் பல்கலைக்கழக கடல் அறிவியல் புலம், சுற்றுச்சூழல் தகவல் மையம், நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் உலக ஓசோன் தினம் கொண்டாடப்பட்டது.கடல்வாழ் உயிரியல் உயராய்வு மையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு புல முதல்வர்சவுந்திரபாண்டியன் தலைமை தாங்கினார். சுற்றுச்சூழல் தகவல் மைய ஒருங்கிணைப்பாளர் ரமேஷ், நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி தங்கராஜ் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் ஓசோன் விழிப்புணர்வு உணர்த்தும் வகையில் மனித சங்கிலி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து விழிப்புணர்வு பேரணி நடந்தது.இந்திய வெப்ப மண்டல வானிலை ஆய்வு நிறுவன அனூப் மகஜன் பங்கேற்று, காலநிலை நடவடிக்கையை மேம்படுத்துதல் என்ற தலைப்பில் ஓசோன் படலத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.பேராசிரியர் லெனின், விஜயலட்சுமி, செந்தில்குமார், சுப்பிரமணியன்,நாகராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.உதவி பேராசிரியர் குமரேசன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை