| ADDED : ஜூலை 23, 2024 11:20 PM
விருத்தாசலத்தில் நுாற்றாண்டு கடந்த அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இங்கு படித்த முன்னாள் மாணவர்கள் பலர் நீதிபதி, வழக்கறிஞர்கள், டாக்டர், பொறியாளர், தொழிலதிபர் என பல்வேறு உயர் பதவிகள் வகித்தனர். பழமையான இப்பள்ளிக்கு, அவர்களின் பங்களிப்புடன் நுழைவு வாயில், கலையரங்கம் என பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது.தற்போது, பள்ளிக்கு வரும் மாணவர்கள் ஒரு சிலர், புள்ளிங்கோ ேஹர் கட்டிங் செய்து வருகின்றனர். அவர்கள் ஆசிரியர்களை மதிப்பதில்லை, சக மாணவர்களிடம் தகராறில் ஈடுபடுவது என, ஒழுங்கீனமான நடவடிக்கையில் ஈடுபடுவதாக புகார் எழுந்தது. ஆசிரியர்களும் தட்டிகேட்க முடியாமல் புலம்பினர்.இந்நிலையில், விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்யராஜ், பள்ளிக்கு திடீர் விசிட் அடித்தார். அங்கு புள்ளிங்கோ ேஹர் கட்டிங் செய்திருந்த மாணவர்களுக்கு, முடிதிருத்தம் செய்யும் தொழிலாளியை வரவழைத்து, சகஜ நிலைக்கு முடியை திருத்தம் செய்தார். அவர்களிடம் படிப்பு மட்டுமே வாழ்வுக்கு உறுதுணையாக இருக்கும் என அட்வைஸ் செய்து, அவர்களை எச்சரித்து வகுப்பறைக்கு அனுப்பினார்.பல்வேறு பணிகளுக்கு இடையே பள்ளி மாணவர்களை கண்காணித்து, அவர்களுக்கு அறிவுரை கூறியது டி.எஸ்.பி.,க்கு பெற்றோரிடம் வரவேற்பை பெற்றுள்ளது.