உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கரும்புகையுடன் இயங்கிய தனியார் பஸ்சுக்கு அபராதம்

கரும்புகையுடன் இயங்கிய தனியார் பஸ்சுக்கு அபராதம்

கடலுார் : கடலுாரில் கரும்புகையுடன் இயங்கிய தனியார் பஸ் மீது டிராபிக் போலீசார் வழக்கு பதிந்து அபராதம் விதித்தனர்.கடலுார் ஜவான்பவன் சாலை சந்திப்பில், டிராபிக் இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, புதுச்சேரியில் இருந்து கடலுார் நோக்கி வந்த தனியார் பஸ்சில் இருந்து, கரும்புகை வந்துள்ளது. இதையடுத்து, போலீசார் பஸ்சை மடக்கி சோதனை செய்தபோது, புகை பரிசோதனை சான்றிதழ் இரண்டு மாதத்திற்கு முன் காலாவதியாகியது தெரியவந்தது.இதை தொடர்ந்து, புகை பரிசோதனை சான்றிதழ் முடிந்து காற்று மாசுபாடு ஏற்படுத்தியதற்காக, தனியார் பஸ் மீது போலீசார் வழக்கு பதிந்து 10,000 ரூபாய் அபராதம் விதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை