உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஜனநாயக மாதர் சங்கம் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஜனநாயக மாதர் சங்கம் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கடலுார், : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கடலுார் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட செயலாளர் மாதவி தலைமையில் கொடுத்துள்ள மனு:தமிழகம் முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புற பெண்களுக்கு, நுண்நிதி நிறுவனங்கள் கடன் தொகை வழங்கி வருகின்றனர். இந்த கடன் தொகையை திரும்ப செலுத்த முடியாத சூழலில் உள்ள பெண்கள் மீது உளவியல் ரீதியாக தாக்குதல் நடத்துகின்றனர்.இந்த நிதி நிறுவனங்களின் அடாவடி செயலை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாநில, மாவட்ட அளவில் அரசு குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். அவர்கள் மீது வரக்கூடிய புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு பெண்களுக்கு கடனுதவி வழங்க தனி வங்கிகளை ஏற்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ