உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு உறுதிமொழி

கடலுார்: குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு தினத்தையொட்டி, வேப்பூர் தாசில்தார் அலுவலகத்தில் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது.கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழியை, தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் ஏற்றுக்கொண்டனர். தொடர்ந்து கலெக்டரால் கையெழுத்து இயக்கம் தொடங்கி வைக்கப்பட்டது. அப்போது, ஸ்ரீமுஷ்ணம் அருகே வலசக்காடு பகுதியில் ஆடுகளை மேய்க்கும் தொழிலில் கொத்தடிமைகளாக ஈடுபட்டிருந்த மீட்கப்பட்ட இரண்டு குழந்தை தொழிலாளர்களுக்கு நிவாரண தொகை தலா 30 ஆயிரம் ரூபாய்க்கான உத்தரவை கலெக்டர் வழங்கினார்.கடைகள் மற்றும் நிறுவனங்களில் குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வு குறித்து துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ