உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஒருவரை கத்தியால் வெட்டிய 4 பேருக்கு போலீஸ் வலை

ஒருவரை கத்தியால் வெட்டிய 4 பேருக்கு போலீஸ் வலை

புவனகிரி; புவனகிரி அருகே குடும்ப பிரச்னையில் ஒருவரை, கத்தியால் வெட்டிய நான்கு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.புவனகிரி அடுத்த மருதுார், வத்ராயன்தெத்து ஓடை தெருவை சேர்ந்த ராமச்சந்திரன் மகன்கள் லெனின், ஸ்டாலின் மற்றும் பாரிநாதன். இவர்கள் மூவருக்குள் குடும்ப பிரச்னை ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் சமரசம் செய்த நிலையில் நேற்று முன்தினம் லெனின் ஒரு தரப்பாகவும், ஸ்டாலின் மற்றும் பாரிநாதன் ஒரு தரப்பாகவும் பிரச்னையில் ஈடுபட்டனர்.ஆத்திரமடைந்த ஸ்டாலின் மற்றும் அவர் மனைவி மணிமேகலை, பாரிநாதன் மற்றும் அவர் மனைவி அன்புமணி ஆகியோர் லெனினை கத்தியால் வெட்டி, கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில் மருதுார் போலீசார் வழக்குப் பதிந்து ஸ்டானின் உட்பட நான்கு பேரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !