உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாமுல் போலீசார் குறித்த ரகசிய புகார் கசியவிட்ட காவல்துறை அதிகாரிகள்

மாமுல் போலீசார் குறித்த ரகசிய புகார் கசியவிட்ட காவல்துறை அதிகாரிகள்

கடலுார் அருகே கெடிலம் ஆற்றில் கடந்த மாதம் இரவில் மணல் கடத்தல் நடந்தது. அங்கு சென்று போலீசார் லாரிகளை மடக்கி பிடித்து பறிமுதல் செய்ய முயன்றனர். அப்போது, சிபாரிசில் 5 லாரிகள் அனுப்பி வைக்கப்பட்டது. ஒரு லாரி மட்டும் மணல் கடத்தல் மாபியா ஒருவருடையது என்பது தெரியவந்தது.இதையறிந்த மணல் மாபியா, தன் மீது நடவடிக்கை எடுத்தால் கடத்தலுக்கு காவல் துறையில் மாமுல் கொடுத்த பட்டியலை வெளியிடுவேன் என கூறியுள்ளார். இதனால், அவர் மீது நடவடிக்கை எடுப்பதில் போலீசார் கரிசனம் காட்டினர்.இந்த சம்பவம் மற்றும் மாமுல் வாங்குவோர் தொடர்பான புகார் மனு சென்னை காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு சென்றுள்ளது. அந்த புகார், கடலுாரில் காவல்துறையில் உள்ள ஒரு பிரிவிற்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், விசாரணைக்கு அனுப்பப்பட்ட புகார், சம்பந்தப்பட்ட போலீசாருக்கு அனுப்பப்பட்டுள்ளது.ரகசியமாக விசாரணைக்கு அனுப்பப்பட்ட புகார், சம்பந்தப்பட்ட போலீசார் கைக்கு கிடைத்திருப்பது காவல்துறை மீதான நம்பகத்தன்மையை இழக்க செய்கிறது. காவல்துறைக்கு விசுவாசமாக இல்லாமல், போலீசாருக்கு உடந்தையாக இருக்கும் காவல்துறை அதிகாரி மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை