உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி வலம்

கைலாசநாதர் கோவிலில் பவுர்ணமி வலம்

நெல்லிக்குப்பம் : நெல்லிக்குப்பம் கைலாசநாதர் கோவிலில் பல ஆண்டுகளுக்கு பிறகு பக்தர்கள் பவுர்ணமியை முன்னிட்டு பக்திர்கள் கோவிலை வலம் வந்தனர்.நெல்லிக்குப்பத்தில் ஆயிரத்து 400 ஆண்டுகள் பழமையான அகிலாண்டேஸ்வரி உடனுறை கைலாசநாதர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ராஜேந்திர சோழனும்,அவரது அத்தை குந்தவையும் திருப்பணிகள் செய்துள்ளதாக வரலாற்று குறிப்பு உள்ளது.இக்கோவிலில் பல ஆண்டுகளுக்கு முன் பவுர்ணமி வலம் சென்றுள்ளதாக வயதானவர்கள் கூறுகின்றனர். அதன்பிறகு கோவில் பராமரிப்பு இல்லாததால் பூஜைகள் நடப்பதே கேள்விகுறியாக இருந்தது.கடந்த சில ஆண்டுகளாக முறையாக பராமரித்து கும்பாபிஷேகம் செய்து அனைத்து விழாக்களும் நடக்கிறது. ஆடி மாதம் பவுர்ணமியை முன்னிட்டு கைலாசநாதர் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பூஜைகள் முடித்து பக்தர்கள் கோவிலின் வெளிபிரகாரத்தில் 27 முறை வலம் வரும் கைலாய வலம் சென்றனர். இங்கு கோவிலை வலம் வந்தால் அனைத்து தோஷங்களும்,துன்பங்களும் நீங்கி சகல ஐஸ்வர்யங்களும் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை