உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குறுவட்ட விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

குறுவட்ட விளையாட்டு போட்டி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்

விருத்தாசலம், : விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், குறுவட்ட விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டது.விருத்தாசலம் அடுத்த இருப்புக்குறிச்சி துாய இருதய மேல்நிலைப் பள்ளியில் நடந்து வரும் குறுவட்ட அளவிலான போட்டிகளில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மேசை பந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சாதனை படைத்து வருகின்றனர்.இறகுபந்து ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் முதல் இரண்டு இடங்களை பிடித்தனர். கேரம் போட்டியில் 14, 17, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் இரண்டாமிடம், பேட்மிட்டன் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் முதலிடம் பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.தலைமை ஆசிரியர் வினோத்குமார் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் பாலசுப்ரணியன் வரவேற்றார். தமிழாசிரியை ஜெயராணி தொகுத்து வழங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் தண்டபாணி, கவுன்சிலர் தீபா மாரிமுத்து ஆகியோர் மாணவர்களுக்கு சான்றிதழ், நினைவுப் பரிசு வழங்கி வாழ்த்தினர்.உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜராஜ சோழன், பிரகாசம், மனோகர், உடற்கல்வி இயக்குனர் மகாலட்சுமி உடனிருந்தனர். உதவி தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை