உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / முற்போக்கு எழுத்தாளர் சங்க பொன்விழா கருத்தரங்கம்

முற்போக்கு எழுத்தாளர் சங்க பொன்விழா கருத்தரங்கம்

கடலுார் : கடலுாரில், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் பொன்விழா ஆண்டு கருத்தரங்கு நடந்தது.கடலுார் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சங்க தலைவர் கோமதி தலைமை தாங்கினார்.செயலாளர் கேத்தரின் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக சாகித்திய அகடாமி விருதாளர் ஆயிஷா நடராஜன், சமூகம் தரும் கதைகள் தலைப்பில் பேசினார். மாவட்ட துணைத் தலைவர் ஆசைத்தம்பி,உதவி செயலாளர் பாரதி தமிழ்முல்லை,மாவட்ட தலைவர் ஜானகிராஜா, மாவட்ட செயலாளர் கவிஞர் பால்கி கருத்துரை வழங்கினர்.நிகழ்ச்சியில் கவிதை அரங்கம், கதையரங்கம் மற்றும் கருத்துரைகள் நடந்தது.கூட்டத்தில் மாணவர்கள் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் வரும் நவ., 14ம் தேதி அண்ணா விளையாட்டரங்கில் 5000 மாணவர்களை வைத்து வாசிப்பு இயக்கம் நடத்துவது.சமவெளி நூற்றாண்டு விழாவை சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக தமிழ் துறையுடன் இணைந்து நடத்துவது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.பொருளாளர் தட்சிணாமூர்த்தி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ