| ADDED : ஜூலை 30, 2024 05:33 AM
Deprecated: mb_convert_encoding(): Handling HTML entities via mbstring is deprecated; use htmlspecialchars, htmlentities, or mb_encode_numericentity/mb_decode_numericentity instead in
/usr/share/phpmyadmin/phpmyadmin/soft/dmrnew/detailamp.php on line
350
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி., பாரி நிறுவனம் சார்பில், கரும்பு வெட்டும் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு உப கரணங்களை வழங்கியது.நெல்லிக்குப்பம் ஈ.ஐ.டி.பாரி சர்க்கரை ஆலையில் ஆண்டுதோறும் முக்கிய மற்றும் சிறப்பு பட்டத்தில், 10 லட்சம் டன் கரும்பு அறவை நடக்கிறது. இதற்காக பல ஆயிரம் விவசாய கூலி தொழிலாளர்கள் கரும்பு வெட்டும் பணியில் ஈடுபடுகின்றனர். இவர்கள் எவ்வித பாதுகாப்பு உபகரணங்களும் பயன்படுத்துவதில்லை. விஷ ஜந்துக்கள் கடிக்கு ஆளாகின்றனர். இதை தவிர்க்க ஆலை மூலம் உயரிய தொழில் நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்ட காலணி மற்றும் கையுறைகள் வழங்கப்பட்டது. ஆலை துணை பொது மேலாளர் நடராஜன் வழங்கினார். இதன் மூலம் தொழிலாளர்கள் விஷ ஜந்துக்கள் கடியில் இருந்து தப்பிக்க முடியும் என கூறினர்.