| ADDED : ஜூன் 14, 2024 06:46 AM
பரங்கிப்பேட்டை: சுனாமியின்போது அமிர்ந்தனந்தாயி அம்மாள் அறக்கட்டளை மூலம் கட்டிக்கொடுக்கப்பட்ட 66 வீடுகளுக்கு, மனைப்பட்டா வழங்கக்கோரி மீனவ கிராம பொதுமக்களுடன், கொத்தட்டை ஊராட்சி தலைவர் ராஜேஸ்வரி ரங்கசாமி, துணை தலைவர் விஜயராஜா ஆகியோர் புவனகிரி தாசில்தார் அலுவலகத்தில் நடந்து வரும் ஜமாபந்தில் மனு கொடுத்தனர்.பரங்கிப்பேட்டை அடுத்த கொத்தட்டை ஊராட்சிக்குட்பட்ட புதுக்குப்பம் மீனவ கிராமத்தில் கடந்த 2004ம் ஆண்டு சுனாமியின்போது கடற்கரையோரம் இருந்த வீடுகள் இடிந்து சேதமடைந்தது. பாதிக்கப்பட்டவர்களுக்கு, அமிர்ந்தனந்தாயி அம்மாள் அறக்கட்டளை மூலம் 66 வீடுகள் கட்டிக்கொடுக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்கள் சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக அமிர்ந்தனந்தாயி அம்மாள் அறக்கட்டளை கட்டிக்கொடுத்த 66 வீட்டில் வசித்து வருகின்றனர். ஆனால், அரசு இதுவரை மனைப்பட்டா வழங்கவில்லை. இதுசம்மந்தமாக, கொத்தட்டை ஊராட்சி கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.எனவே, அமிர்ந்தனந்தாயி அம்மாள் அறக்கட்டளை மூலம் கட்டிக்கொடுக்கப்பட்ட வீடுகளுக்கு மனைப்பட்டா வழங்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.