உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வளையமாதேவி கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை 

வளையமாதேவி கோவிலில் பூட்டை உடைத்து கொள்ளை 

சேத்தியாத்தோப்பு : சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி மூக்குத்தி அம்மன் கோவில் பூட்டை உடைத்து, அம்மன் கழுத்தில் இருந்த நகை, உண்டியல்களில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.சேத்தியாத்தோப்பு அடுத்த வளையமாதேவி மூக்குத்தி அம்மன் கோவில் உள்ளது. அதே ஊரை சேர்ந்த கல்யாணசுந்தரம் நிர்வகித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு, பூஜை முடித்து பூட்டிவிட்டு சென்றுள்ளனர்.நேற்று காலை கோவிலின் நுழைவாயில் பூட்டு உடைந்து திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் பூட்டை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது. மற்றொரு உண்டியல் கோவில் பின்புறத்தில் உடைக்கப்பட்டு காலி குடம் மட்டும் கிடந்தது.அம்மன் கழுத்திலிருந்த ஒரு சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.இது குறித்த தகவலின்பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். கடலுாரில் உள்ள கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டது.இதுகுறித்து கோவில் நிர்வாகி கல்யாணசுந்தரம் கொடுத்த புகாரின் பேரில் சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்குப்பதிந்து நகை பணம் கொள்ளையடித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ