உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆக்கிரமிப்புகள் அகற்றம்

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வடிகால் வாய்க்கால் ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் அகற்றப்பட்டது.சிதம்பரம் 33வது வார்டு இந்திரா நகரையொட்டி வடிகால் வாய்க்கால் உள்ளது. மழை வெள்ள காலங்களில் சிதம்பரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளின் முக்கிய வடிகாலாக உள்ளது. இப்பகுதிகளில் 40 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளிட்ட ஆக்கிரமிப்புகள் உள்ளதால் வாய்க்கால் குறுகியுள்ளது.இதனால் மழை மற்றும் வெள்ள காலங்களில் தண்ணீர் வடிவதில் சிக்கல் ஏற்பட்டது. இந்நிலையில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்து பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து வாய்க்காலை அகலப்படுத்தும் நோக்கில், பொதுப்பணி துறையினர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற முடிவு செய்து ஆக்கிரப்பாளர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டது. அதையடுத்து, கடந்த இரு நாட்களாக பொக்லைன் இயந்திரம் மூலம் வாய்க்கால் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்து வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ