மேலும் செய்திகள்
ஆலோசனை கூட்டம்
07-Aug-2024
கடலுார் : கடலுார் மாநகர அனைத்து கட்சிகள், குடியிருப்போர் நலச்சங்கங்கள் மற்றும் பொது நல அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் சூரப்பநாயக்கன்சாவடி மா.கம்யூ., அலுவலகத்தில் நடந்தது.குடியிருப்போர் சங்க மாவட்ட சிறப்புத் தலைவர் மருதவாணன் தலைமை தாங்கினார். மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மாதவன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜேஷ் கண்ணன், மாநகர செயலாளர் அமர்நாத், காங்., மாவட்ட தலைவர் திலகர், மாநில செயலாளர் வழக்கறிஞர் சந்திரசேகரன், துணை மேயர் தாமரைச்செல்வன், வழக்கறிஞர் திருமார்பன், ம.தி.மு.க., கண்ணன், மாநகர பொது நல அமைப்பு தலைவர் ரவி, தமிழ்நாடு மீனவர் பேரவை தலைவர் சுப்பராயன், எழுத்தாளர் சங்கம் பால்கி பேசினர்.திருப்பாதிரிப்புலியூர் ரயில் நிலையத்தை கடலுார், திருப்பாப்புலியூர் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும். சேலம் - விருத்தாசலம் ரயிலை கடலுார், திருப்பாதிரிப்புலியூர் வரை நீட்டிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி வரும் 13ம் தேதி ரயில் மறியல் போராட்டம் நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
07-Aug-2024