ஏரியில் அழுகிய ஆண் சடலம்; பண்ருட்டி அருகே பரபரப்பு
பண்ருட்டி : பண்ருட்டி அடுத்த கொரத்தி ஏரியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் நேற்று கிடந்தது.இறந்து 10 நாட்கள் ஆன நிலையில் அழுகிய நிலையில் கிடந்தது. இறந்தவர் முழுக் கை சட்டை அணிந்திருந்தார்.இடுப்பிற்கு கீழ் துணி இல்லை. இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா என்பது தெரியவில்லை.தகவலறிந்த புதுப்பேட்டை போலீசார் சடலத்தை கைப்பற்றி முண் டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.இதுகுறித்து புதுப்பேட்டை போலீசார் வழக் குப் பதிந்து, இறந்தவர் யார், அவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர். ஏரியில் அழுகிய நிலையில் சடலம் கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.