UPDATED : ஜூன் 14, 2024 01:53 PM | ADDED : ஜூன் 14, 2024 05:50 AM
கடலுார்: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி ரூ. 23.40 லட்சம் மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.நெய்வேலியை சேர்ந்தவர்கள் செந்தமிழ்செல்வன்,57; ரமேஷ்,57; நண்பர்கள். இதில் ரமேஷ், பணி நிமித்தமாக மேற்கு வங்க மாநில் புருலியா மாவட்டத்தில் வசித்து வந்தார்.இவர், கடந்த 2020ம் ஆண்டு செந்தமிழ்செல்வனை மொபைல் போனில் தொடர்பு கொண்டு, தான் மால்டா நாட்டில் வசிப்பதாகவும், தங்களின் மகனுக்கு மாதம் ரூ.1.50 லட்சம் சம்பளத்தில் வேலை வாங்கி தருவதாகவும், அதற்கு ரூ.1 லட்சம் செலவாகும். அந்த பணத்தை எனது உறவினரான மேற்கு வங்கத்தை சேர்ந்த மைக்கேல் துசார் அம்ரித்,55; என்பவரின் வங்கிக் கணக்கில் செலுத்துமாறு கூறினார்.அதனை நம்பி செந்தமிழ்செல்வன் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்கள் என, 10 பேர் ரூ.23.40 லட்சத்தை பல தவணைகளாக செலுத்தினார். அதன்பிறகு இருவரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை.இதுகுறித்து செந்தமிழ்செல்வன் அளித்த புகாரின் பேரில், மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டனர். அதில், கிடைத்த தகவலின் பேரில் மேற்குவங்க மாநிலம் புருலியா மாவட்டத்தில் பதுங்கியிருந்த ரமேஷ் மற்றும் மைக்கேல் துசார் அமரித் ஆகியோரை கைது செய்தனர்.