உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஆவணமில்லாத ரூ.5.90 லட்சம் ரொக்கம்; பண்ருட்டி வாகன சோதனையில் சிக்கியது

ஆவணமில்லாத ரூ.5.90 லட்சம் ரொக்கம்; பண்ருட்டி வாகன சோதனையில் சிக்கியது

பண்ருட்டி : பண்ருட்டியில் வாகன சோதனையில் ஆவணமின்றி காரில் கொண்டு சென்ற ரூ.5.90 லட்சத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.பண்ருட்டி போக்குவரத்து சப் இன்ஸ்பெக்டர் சண்முகராஜா மற்றும் போலீசார் நேற்று கடலுார் சாலையில் திருவதிகை ரயில்வே கேட் அருகே வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது, கடலுார் நோக்கி வந்த மகேந்திரா எஸ்.யூ.வி.500 காரை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் ரூ.5.90 லட்சம் பணம் இருந்தது.காரில் இருந்த ராஜஸ்தான் மாநிலம் பாலி நகரைச் சேர்ந்த மனோஜ்,28; பாஞ்சாராம்,24; ஆகியோரை விசாரித்தனர். அதில், இருவரும் பெங்களூருவில் உள்ள நாகேஷ் என்பவரின் பிளாஸ்டிக் கம்பெனியில் வேலை செய்வதாகவும், புதுச்சேரியில் கார் வாங்குவதற்காக நாகேஷ் பணம் கொடுத்து அனுப்பியதாக கூறினர். ஆனால், அதற்கான ஆவணங்கள் இல்லை.அதனால், இருவரையும் அவர்கள் கொண்டு வந்த பணம் மற்றும் காரை பண்ருட்டி போலீசில் ஒப்படைத்தனர். டி.எஸ்.பி., பழனி, இன்ஸ்பெக்டர் கண்ணன் ஆகியோர் விசாரித்த பின், வருமான வரித்துறை மற்றும் வணிகவரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை