உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதில் கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல்

விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பதில் கிராமப்புற மாணவர்களுக்கு சிக்கல்

திட்டக்குடி: தமிழகத்தில் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர் மாதத்தில் துவங்க உள்ளது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட உள்ளது.12 வயது முதல் 19 வயது வரையிலான பள்ளி மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதேபோல பள்ளி மாணவர்களுக்கு குறுவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளும் தற்போது நடந்து வருகிறது. ஆனால், மாவட்டத்தின் கிராமப்புற பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசு பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் இல்லாத நிலையில், விளையாட்டுப் போட்டிகள் குறித்த விழிப்புணர்வே இல்லாமல் உள்ளனர்.அரசு விதிகளின் படி கிராம புற பள்ளிகளில் போதிய மாணவர் சேர்க்கை இல்லாததால் உடற்கல்வி ஆசிரியர் பணியிடமே இல்லாத நிலை உள்ளது. 150 மாணவர்களுக்கும் மேல் உள்ள பள்ளிகளில் பகுதிநேர உடற்கல்வி ஆசிரியர் பணிபுரிகிறார்.ஆதலால் விளையாட்டில் ஆர்வம் இருந்தும், போட்டிகளுக்கான விதிமுறைகள், உரிய வழிகாட்டுதல் இல்லாததால் திறமையுள்ள கிராமப்புற மாணவர்கள் போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. ஒவ்வொரு உயர்நிலைப் பள்ளிக்கும் ஒரு பகுதிநேர உடற்கல்வி ஆசிரியரும், 200 மாணவர்களுக்கும் மேல் உள்ள உயர்நிலை பள்ளிக்கு ஒரு உடற்கல்வி ஆசிரியரையும் கிராமப்புற மாணவர்கள் நலன்கருதி நியமனம் செய்ய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை