மணல் கடத்தியவர் கைது
பண்ருட்டி : பண்ருட்டி அருகே டிராக் டரில் மணல் கடத்திய நபரை போலீசார் கைது செய்தனர்.பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு மேற்கு தெரு வைச் சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 47; விவசாயி. இவர், நேற்று கெடிலம் ஆற்றங்கரையில் தனது டிராக்டரில் மணல் அள்ளினார்.தகவலறிந்த காடாம்புலியூர் போலீசார் மணல் அள்ளிய ரஞ்சித்குமாரை கைது செய்து, டிராக்டரை பறிமுதல் செய்தனர்.