உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

குப்பை கிடங்கால் சுகாதார சீர்கேடு

மாவட்டத்தில், புதியதாக உருவாக்கப்பட்ட கடைகோடி நகராட்சி ஒன்றில், குப்பைகளை சேகரிப்பது, காய்கறி கழிவுகளிலிருந்து உரம் தயாரிக்கும் பணி தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், குப்பைகளை முறையாக தரம் பிரிக்காமல் அனைத்து குப்பைகளையும் ஒன்றாக போடுவதாகவும், சில பிளாஸ்டிக் கழிவுகளை தீயிட்டு எரிப்பதாகவும் அந்நிறுவனம் மீது புகார் எழுந்துள்ளது.குப்பைகளை தீயிட்டு எரிப்பதால் புகை மூட்டம் ஏற்பட்டு அருகிலுள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து கலெக்டர் வரையில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் நகராட்சி உருவாக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளாக எல்லை விரிவாக்கம் செய்யப்படவில்லை. ஏற்கனவே உள்ள மக்கள்தொகை, வீடுகள், கடைகள் அடிப்படையில் துாய்மை பணிக்கான ஒப்பந்தம் செய்யப்பட்டு தொகை வழங்கப்படுகிறது. கூடுதல் வழங்காததால், ஒப்பந்ததாரரும், குப்பை விஷயத்தில் அக்கரை காட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, இவ்விஷயத்தில் மாவட்ட நிர்வாகம் தலையிட்டு குப்பை பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை