அஞ்சல் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை
கடலுார்: அஞ்சல் தலை சேகரிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை திட்டத்தில், பயன்பெற விண்ணப்பிக்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.கடலுார் கோட்ட அஞ்சலகங்களின் கண்காணிப்பாளர் கணேஷ் செய்திக்குறிப்பு;பள்ளி மாணவர்களிடையே அஞ்சல் தலை சேகரிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், மாணவர்களுக்கு இந்திய அஞ்சல் துறை சார்பில், ஆண்டுக்கு 6000 ரூபாய் உதவித் தொகையாக வழங்குகிறது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவராக இருக்க வேண்டும்.அஞ்சல் தலை தொடர்பான எழுத்து வினாடி, வினா வரும் செப்., 28ம் தேதி நடத்தப்படும். இதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள், இறுதித் தேர்வுக்கான அஞ்சல் தலை திட்டத்தை சமர்ப்பிக்க வேண்டும். வினாடி, வினா தேர்வு 50 கேள்விகளை கொண்டிருக்கும் (தெரிவு விடை, வினா). அவை நடப்பு விவகாரங்கள், வரலாறு, அறிவியல், விளையாட்டு, கலாசாரம்,ஆளுமைகள், புவியியல் மற்றும் தபால் தலை (உள்ளூர், தேசிய) தொடர்புடையதாகஇருக்கும்.வினாடி, வினா முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு பிராஜக்ட் தொடர்புடைய விரிவான வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்.விண்ணப்ப படிவம் http://tamilnadupost.cept.gov.inஎன்ற முகவரியில் பதிவிறக்கம் செய்யலாம். விண்ணப்ப படிவங்கள் அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர், கடலுார் கோட்டம், கடலுார்-607001 என்ற முகவரிக்கு வரும் செப்., 4ம் தேதிக்கு முன்னர் வந்து சேர வேண்டும்.அஞ்சல் உறைமேல் Deen Dayal SPARSH Yojana 2024-25 என்று தெளிவான மேற்கோள் குறிப்பிடப்பட வேண்டும். விண்ணப்ப படிவத்தில் வரிசை எண் 8 மற்றும் 9 நிரப்பும்போது, தெரிவு பொருந்தவில்லை எனில் N/A என குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.