மேலும் செய்திகள்
கல்லுாரியில் பல்திறன் போட்டி
05-Feb-2025
விருத்தாசலம்; விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு கல்லுாரியில் இயற்பியல் மன்றம் மற்றும் தேசிய அறிவியல் தின விழா கொண்டாடப்பட்டது.விழாவிற்கு, கல்லுாரி முதல்வர் சுரேஷ்குமார் தலைமை தாங்கினார். மாணவி கலைவாணி வரவேற்றார். இயற்பியல் துறைத் தலைவர் முருகேசன் முகப்புரை வழங்கினார். பண்ருட்டி அண்ணா பொறியியல் பல்கலைக் கழகத்தின் டீன் முத்துக்குமரன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார். மாணவி வினோதினி நன்றி கூறினார். இயற்பியல் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள் பலர் பங்கேற்றனர்.
05-Feb-2025