உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / புட்லாயி அம்மன் கோவிலில் செடல் உற்சவம்

புட்லாயி அம்மன் கோவிலில் செடல் உற்சவம்

கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர் பாரதிதாசன் நகர், புட்லாயி அம்மன் கோவிலில் செடல் உற்சவம் நடந்தது.விழாவின், ஐந்தாம் நாள் செடல் உற்சவம், முன்னாள் நகரமன்ற தலைவர் சுப்பிரமணியன்-வசந்தி ஆகியோர் உபயத்தில் நடந்தது. அப்போது, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அ.தி.மு.க., எம்.ஜி.ஆர்., இளைஞர் அணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் அன்னதானம் வழங்கினார்.அப்போது, 23வது வார்டு பிரதிநிதிகள் ஜெயராமன், இளங்கோவன், அவைத்தலைவர் ஜெயமூர்த்தி, 22வது வார்டு செயலாளர் பன்னீர்செல்வம், வார்டு பிரதிநிதி தங்கபாலா, தகவல் தொழில்நுட்ப பிரிவு மணிமாறன், கார்த்தி, ஜெயகரன், சந்துரு, பரணிதரன் மற்றும் மகளிர் அணி அம்பிகா, தேவகி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை