உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மங்கலம்பேட்டை பள்ளியில் சமூக தணிக்கை குழு ஆய்வு

மங்கலம்பேட்டை பள்ளியில் சமூக தணிக்கை குழு ஆய்வு

விருத்தாசலம்: மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், சமூக தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.மங்கலம்பேட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், 6 முதல் பிளஸ் 2 வரை 400க்கும் மேற்பட்ட மாணவிகள் படிக்கின்றனர். தலைமை ஆசிரியர் உட்பட 20க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இங்கு, காலை உணவுத்திட்டம், மதிய சத்துணவுத்திட்ட உணவு குறித்து ஊரக வளர்ச்சித்துறை வட்டார வள பயிற்றுனர் பிரேமா சங்கர் ஆய்வு செய்தார்.அப்போது, மதிய உணவு, அவித்த முட்டை ஆகியவற்றின் தரம், எடை, தயாரிக்கும் முறைகள், சமயைல் கூடம் ஆகியவற்றை ஆய்வு செய்து, உணவின் தரம் குறித்து சோதனை செய்யப்பட்டது. மேலும், சத்துணவு சாப்பிட்ட மாணவிகளிடம் உணவின் சுவை குறித்து கேட்டறிந்தார்.பின்னர், சமூக தணிக்கைக்குழு ஆய்வுக் கூட்டத்தில், அன்றாட காலை, மதிய உணவின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பள்ளி தலைமை ஆசிரியர் காளமேகம், பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் சத்யா ராஜ்குமார், கல்வியாளர் ராஜவேல், பள்ளி ஆசிரியர் மாலா உட்பட அலுவலர்கள் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ