உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: பிரேமலதா விஜயகாந்த் உறுதி 

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு: பிரேமலதா விஜயகாந்த் உறுதி 

கடலுார்,: கடலுார் தொகுதியில் தே.மு.தி.க., வெற்றி பெற்றால் போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, அக்கட்சி பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேசினார். மஞ்சக்குப்பம் தலைமை தபால் நிலையம் அருகில் பொதுச் செயலாளர் பிரேமதலதா விஜயகாந்த் பேசியதாவது: கடலுார் தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க., வேட்பாளர் சிவக்கொழுந்து கடந்த 2011ம் ஆண்டு பண்ருட்டி எம்.எல்.ஏ.,வாக தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக பணியாற்றினார். மண்ணின் மைந்தர். நடைபெற உள்ள தேர்தலில் அவரை அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்தால் லோக்சபாவில் கடலுார் தொகுதி மக்களாக குரல் ஒலிப்பார். கடலுாரில் இருந்து புதுச்சேரி செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பயண நேரத்தை குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும். கடலுார் சிப்காட் தொழிற்சாலைகளால் நீர் மாசுபடுகிறது. இதுதொடர்பாக ஆய்வு நீர் மாசுபடுவதை தடுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் சம்பத், அவைத் தலைவர் குமார், முன்னாள் அமைச்சர் சம்பத் மகன் பிரவீன், அனைத்துலக எம்.ஜி.ஆர்., மன்ற துணை செயலாளர் சுப்ரமணியன், எம்.ஜி.ஆர்., இளைஞரணி துணை செயலாளர் கார்த்திகேயன், மீனவரணி தங்கமணி, ஒன்றிய செயலாளர் காசிநாதன், பகுதி செயலாளர் மாதவன், தே.மு.தி.க., மாவட்ட அவைத் தலைவர் ராஜாராம், மாவட்ட செயலாளர்கள் உமாநாத், வெங்கடேஷ், பொருளாளர் ராஜ், துணை செயலாளர் சித்தநாதன், மாநகர செயலாளர் சரவணன் மற்றும் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !