விளையாட்டு போட்டி
பெண்ணாடம்: தேசிய விளையாட்டு தினத்தையொட்டி, கொத்தட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மற்றும் பெண்ணாடம் அரிமா சங்கம் சார்பில் விளையாட்டு போட்டிகள் நடந்தது.நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். அரிமா சங்க தலைவர் சக்திவேல், சாசன தலைவர் ஞானபிரகாசம், மாவட்ட தலைவர்கள் திருஞானசம்பந்தம், பழமலை முன்னிலை வகித்தனர். ஆசிரியர் செல்வன் வரவேற்றார். ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கபடி, கோ - கோ, சாக்கு ஓட்டம், இசை நாற்காலி உள்ளிட்ட போட்டிகள் மற்றும் வினாடி - வினா போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.