உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில கால்பந்து போட்டி நெய்வேலி அணி அசத்தல்

மாநில கால்பந்து போட்டி நெய்வேலி அணி அசத்தல்

நெய்வேலி : நெய்வேலியில் மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டிகள் நடந்தது.லீட்ஸ் புட்பால் கிளப் சார்பில் நடந்த போட்டியை பா.ம.க., முன்னாள் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் துவக்கி வைத்தார்.டி.என்.வி., சிட்பண்ட்ஸ் உரிமையாளர் பாஸ்கர் மற்றும் பா.ம.க., மாவட்ட சிறுபாண்மை பிரிவின் செயலாளர் ஜார்ஜ் பெர்ணாண்டஸ் முன்னிலை வகித்தனர்.போட்டியில் நெய்வேலி டி.ஒய்.எப்.ஐ.,, அணியினர் முதல் பரிசை வென்று கோப்பையை பெற்றனர்.நிகழ்ச்சியில் முன்னாள் பா.ம.க., மாவட்ட இளைஞர் சங்க தலைவர் விஜயராகவன், முன்னாள் மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜசிம்மன் ஒன்றிய தலைவர் அருணகிரி, ஒன்றிய இளைஞர் சங்கத் தலைவர் வேலு மாவட்ட பசுமைத்தாயகம் செயலாளர் ராஜசேகர் மற்றும் பா.ம.க., நிர்வாகிகள் சரவணன் பார்த்திபன் சிவமுருகன் ராஜேஷ் சிவராமன் முருகானந்தன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ