மேலும் செய்திகள்
முதல்வர் கோப்பை போட்டி விண்ணப்பிக்க அழைப்பு
21-Aug-2024
விளையாட்டு போட்டி காலக்கெடு நீட்டிப்பு
27-Aug-2024
திட்டக்குடி: தமிழக முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் வரும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்படுகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசுஊழியர்கள் என ஐந்து பிரிவுகளில் 27 விளையாட்டுக்கள் மாவட்ட, மண்டல, மாநில அளவில் நடத்தப்பட உள்ளது.போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில், வரும் 25ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டிகள் குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் மாவட்டம் முழுவதும் குறுவட்ட விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருவதால், எதிர்பார்த்த அளவு விளையாட்டுவீரர்கள் இன்னும் பதியவில்லை.இந்நிலையில் திட்டக்குடி அடுத்த அரங்கூர் ஊராட்சி தலைவர் ராஜா, முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் குறித்து மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். மேலும் அவரது முயற்சியில் ஆன்லைனில் பதிவு செய்ய விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு ஊராட்சி அலுவலகத்திலேயே கம்ப்யூட்டர் மூலம் பதிவு செய்ய உதவி வருகிறார். இதனால் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
21-Aug-2024
27-Aug-2024