உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / திடீர் மழையால் உளுந்து பயிர் பாதிப்பு

திடீர் மழையால் உளுந்து பயிர் பாதிப்பு

சிதம்பரம் : கடலுார் மாவட்டத்தில் பெய்து வரும் திடீர் கன மழையால், உளுந்து பயிர் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.கடலுார் மாவட்டத்தில், காவிரி டெல்டா கடைமடை பகுதிகளான குமராட்சி, காட்டுமன்னார்கோவில் மற்றும் சிதம்பரம், பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் 70 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது. கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட பெஞ்சல் புயல் பாதிப்பில், மகசூல் குறைந்ததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர். .இதையடுத்து, ஜனவரி மாத இறுதியில் உளுந்து பயிர் விதைப்பில், விவசாயிகள் தீவிரம் காட்டினர். தற்போது உளுந்து பயிர் நல்ல முறையில் வளர்ந்து வந்ததால், நெல் பாதிப்பில் ஏற்பட்ட நஷ்டத்தை உளுந்து பயிரில் மீட்டெடுக்கலாம் என நம்பி இருந்தனர். தற்போது, உளுந்து பூ பூக்கும் தருவாய்க்கு வந்துள்ள நிலையில், இரண்டு நாட்களாக கன மழை பெய்து வருவதால், வயல்களில் தண்ணீர் தேங்கி மண் பிடிப்பு இல்லாத, உளுந்து பயிரின் சிறு வேர்கள் அழுக துவங்கியுள்ளது. மேலும் மழைக்கு பின், வெயில் அடித்தால் உளுந்து செடிகள் முற்றிலும் காய்ந்து கருகி விடும் என்பதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !