| ADDED : ஜூலை 23, 2024 12:04 AM
பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு, சிதம்பரம் எம்.எல்.ஏ., பாண்டியன், தொகுதி மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பில், டேபிள், சேர் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் ரவி தலைமை தாங்கினார். முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட இணை செயலாளர் ரங்கம்மாள் மாணிக்கவேல், ஒன்றிய அவைத் தலைவர் பேராசிரியர் ரங்கசாமி, பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி முன்னாள் தலைவர் வசந்த் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் விஜயலட்சுமி வரவேற்றார். மாணவர்களுக்கு, டேபிள், சேர்களை பாண்டியன் எம்.எல்.ஏ., வழங்கினார். வட்டார கல்வி அலுவலர் உமாராணி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், பாஸ்கர், மீனவர் கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் குட்டியாண்டி, கிள்ளை நகர செயலாளர் தமிழரசன், துணை சேர்மன் முடிவண்ணன், தச்சக்காடு ஊராட்சி தலைவர் ராம் மகேஷ் மற்றும் கிராம நிர்வாகிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.புதுப்பேட்டை ஊராட்சி தலைவர் சித்ரா நன்றி கூறினார்.