மேலும் செய்திகள்
கஞ்சா வைத்திருந்த வாலிபர்கள் கைது
05-Mar-2025
விருத்தாசலம்; கிராவல், செம்மண் கடத்திய டாரஸ் லாரிகளை பறிமுதல் செய்த போலீசார், வாகன உரிமையாளர் உட்பட மூவரை கைது செய்தனர்.விருத்தாசலம் டி.எஸ்.பி., பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நேற்று மதியம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, காணாதுகண்டான் பெட்ரோல் பங்க் அருகே வந்த மூன்று டாரஸ் லாரிகளை மடக்கி சோதனை செய்தனர். அதில், மூன்று டிப்பர்களிலும் தலா 6 யூனிட் கிராவல் மற்றும் செம்மண் ஆகியன கடத்திச் சென்றது தெரிய வந்தது. டாரஸ் லாரிகள் பறிமுதல் செய்யப்பட்டன.இது குறித்து சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் வழக்குப் பதிந்து, விருத்தாசலம் சின்னகண்டியங்குப்பம் ரங்கநாதன் மகன் சிவராமன், 42, குறிஞ்சிப்பாடி மதனகோபாலபுரம் கணேசன் மகன் சதாசிவம், 34, வடக்குத்து அருணாசலம் மகன் ராமச்சந்திரன், 28, ஆகிய மூவரை கைது செய்தனர்.மேலும், தலைமறைவான ஊத்தாங்கால் சிங்காரவேல் மகன் சதீஷ், வடக்குத்து ராமசாமி மகன் ராஜ்மோகன், அஜித்குமார் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர். டி.எஸ்.பி., அதிரடி சோதனையில் கனிம வளங்களை கடத்திச் சென்ற வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
05-Mar-2025