உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வயலில் பச்சிளம் ஆண் குழந்தை பண்ருட்டி அருகே பரபரப்பு

வயலில் பச்சிளம் ஆண் குழந்தை பண்ருட்டி அருகே பரபரப்பு

பண்ருட்டி: பண்ருட்டி அருகே, பச்சிளம் ஆண் குழந்தையை வயலில் போட்டுவிட்டு சென்றது யார் என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை ரெட்டிக்குப்பத்தை சேர்ந்தவர் அதியமான் மனைவி மஞ்சுளா,45; இவர் நேற்று காலை, அப்பகுதியில் உள்ள வயலுக்கு சென்றார். வயலில் குழந்தையின் அழுகுரல் கேட்கவே, அருகில் சென்று பார்த்தபோது பிறந்து ஓரிரு நாளே ஆன பச்சிளம் ஆண் குழந்தை இருந்ததை கண்டு திடுக்கிட்டார். அவர் அளித்த தகவலின்பேரில் புதுப்பேட்டை போலீசார் விரைந்து சென்று, குழந்தையை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு குழந்தையை டாக்டர்களின் கண்காணிப்பில் பாதுகாப்பாக பராமரிக்கப்பட்டு வருகிறது.வயலில் கிடந்த பச்சிளம் குழந்தை யாருடையது. எதற்காக வயலில் போட்டுவி்டடு சென்றனர் என்பது குறித்து புதுப்பேட்டை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை