உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்

நந்தனார் அரசு பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம்

கடலுார்: சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருக்குறள் கருத்தரங்கம், சமுதாய பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. தலைமை ஆசிரியர் குகநாதன் தலைமை தாங்கினார். ஆசிரியர் ஜெய்சங்கர் வரவேற்றார்.திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன், திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு திருக்குறள் புத்தகம் பரிசாக வழங்கி பேசினார். ஆசிரியைகள் கலைச்செல்வி, ராஜேஸ்வரி ஆகியோர் திருக்குறள் ஒப்பித்தல் போட்டியில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர். செயலாளர் நடராஜன் வாழ்த்தி பேசினார். விழாவில் ஆசிரியர்கள் ஜெயந்தி, பூமா, வளர்மதி உட்ட பலர் பங்கேற்றனர். ஆசிரியை தெய்வாணை நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Palanisamy T
செப் 08, 2024 17:40

திருக்குறளை ஒப்பித்தால்மட்டும் போதுமா? என்னப் படிக்கின்றோம், இதைச் தெரிந்துக் கொண்டோம் என்பது மிக முக்கியம். நமக்கு பொருள் விளங்க வேண்டும். திருக்குறள் வேறுமறிவியல் நூல் மட்டுமில்லை. அது மெய்யறிவு மூலாகவும் இயங்குகின்றது. இருவேறு உண்மைகள் அறிய பாமர மக்களும் படிக்கலாம் சித்தர்களும் படிக்கலாம். மெய்யறிவு நூலென்பது வேதநூலுக்கு ஒப்பாகும். இந்த உண்மையை எங்கள் ஊருக்கு வருகைத் தந்த வாரியார் ஸ்வாமிகள் குரள் வேதநூலென்று சொன்னதைத்தான் சொல்லுகின்றேன். வேதங்களின் சில உண்மைகளை குறள் படிக்கும் போதுதான் விளங்கிற்று .ஒரே வாசகம்தான் தமிழ் சொல்லுகின்றது. அதை அறிவியலாகவும் மெய்யறிவாகவும் பார்க்கலாம். இதுதான் நம் தாய் தமிழ்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை