பஸ் நிலையத்தில் கால அட்டவணை தேவை
பெண்ணாடம்: பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க வேண்டும்.விருத்தாசலம் - திட்டக்குடி மார்க்கத்தில் பெண்ணாடம் முக்கிய பகுதியாக உள்ளது. இங்கு அரசு மற்றும் தனியார் பள்ளிகள், சிமென்ட், சர்க்கரை ஆலைகள், அரசு அலுவலகங்கள் உள்ளன. சுற்றியுள்ள 30க்கும் மேற்பட்ட கிராம மக்கள், பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அன்றாட தேவைக்கு பெண்ணாடம் வந்து தான் விருத்தாசலம், திட்டக்குடி, கடலுார், திருச்சி, சென்னை, அரியலுார், ஜெயங்கொண்டம், சேலம் உட்பட பல பகுதிகளுக்குச் செல்ல வேண்டும்.பஸ் நிலையத்தில் பேருந்து கால அட்டவணை இல்லாததால் வெளியூர் பயணிகள் பஸ் வரும் நேரம் தெரியாமல் அவதியடைகின்றனர். எனவே, பெண்ணாடம் பழைய பஸ் நிலையத்தில் பேருந்து கால அட்டவணை அமைக்க பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.