மேலும் செய்திகள்
அன்னுாரில் கடும் போக்குவரத்து நெரிசல்
13-Mar-2025
கடலுார்; கடலுார் முதுநகரில் டேங்கர் லாரி தீப்பிடித்த சம்பவத்தை தொடர்ந்து போலீசாரின் அலட்சியத்தால் முதுநகர் முழுதும் காலையில் கடுமைான போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.சீர்காழியில் இருந்து கச்சா எண்ணெய் ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று நேற்று முன்தினம் இரவு சென்னை சென்று கொண்டிருந்தது. கடலுார் முதுநகரில் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள மின்கம்பத்தில் மோதி பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. விடிய விடிய தீயணைப்புத்துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.டேங்கர் லாரி, தீயணைப்பு வாகனம் அருகருகே நின்றதால் அவ்வழியாக எந்த வாகனமும் செல்ல முடியாமல் போலீசார் தடுப்பு ஏற்படுத்தினர்.காலை 8:30 மணி முதல் பள்ளிக்கு செல்வோர், அலுவலகங்களுக்கு செல்வோர் என கூட்டம் சாலையில் நிரம்பி வழிந்தது. சிதம்பரம், சிப்காட் செல்லும் வாகனங்கள் சம்பவ இடம் வரை சென்று பின்னர் போலீசார் இடது பக்கம் குறுகலான பாதையில் யாருமே செல்ல முடியாத அளவில் உள்ள சாலையில் திருப்பி விட்டனர்.இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்துப் போனது. போலீசார் முன்கூட்டியே சிதம்பரம் செல்லும் வாகனங்கள் பை பைாஸ் சாலை வழியாக செல்லவும் என எச்சரிக்கை போர்டு வைத்திருக்கலாம். அல்லது முதுநகரில் பழைய போலீஸ் நிலையம் முன்பே வாகனங்களை மாற்றுப்பாதையில் விட்டிருக்கலாம். போலீசார் எதையும் கண்டுகொள்ளாமலும், சரியான திட்டமிடல் இல்லாமலும் இருந்ததால் முதுநகர் அனைத்து முக்கிய தெருக்களிலும் வாகன நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் நெடுநேரம் நிற்பதை பார்த்து பரிதாபப்பட்டு ஆங்காங்கே இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தற்காலிகமாக போலீஸ் வேலையை செய்தனர். காலை 10:00 மணிக்கு மேல் படிப்படியாக போக்குவரத்து சீரானது.
13-Mar-2025