உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சென்னை -- திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல்

சென்னை -- திருச்சி சாலையில் போக்குவரத்து நெரிசல்

வேப்பூர்,: வேப்பூர் அருகே நடந்த பள்ளிக் கல்வித்துறை மாநாட்டில் பங்கேற்க வந்த வாகனங்களால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தமிழக கல்வித்துறையின் பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் 'பெற்றோரை போற்றுவோம்' நிகழ்ச்சியின் கடைசி மண்டல மாநாடு கடலுார் மாவட்டம், வேப்பூர் அடுத்த திருப்பயரில் நேற்று நடந்தது. அதில், முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார். மாநாட்டில் பங்கேற்க 7 மாவட்டங்களை சேர்ந்த ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர் மற்றும் பொதுமக்கள் பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களில் வேப்பூரில் குவிந்தனர்.இந்த வாகனங்களால், வேப்பூரில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தடுக்க, வட மாவட்டங்களில் இருந்து வருவோருக்கு, சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் - நகர் கிராம சாலையில் போக்குவரத்து மாற்றப்பட்டது.இந்நிலையில், மாநாட்டிற்கு எதிர்பார்த்ததை விட மக்கள் அதிகளவில் வந்ததால் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் இருபுறமும் வேப்பூர் அடுத்த சேப்பாக்கத்திலிருந்து 20 கி.மீ., துாரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், பயணிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ