உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / டென்னிஸ் விளையாடியவர் மயங்கி விழுந்து சாவு பெண்ணாடம் அருகே சோகம்

டென்னிஸ் விளையாடியவர் மயங்கி விழுந்து சாவு பெண்ணாடம் அருகே சோகம்

பெண்ணாடம் : பெண்ணாடம் அருகே நண்பர்களுடன் விளையாடிய வாலிபர் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த பெ.பொன்னேரி, செட்டிக்குளத்தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்ரமணியன் மகன் அன்பரசன், 24. டிப்ளமோ இன்ஜி., படித்துள்ளார். இவர் நேற்று இரவு அதே பகுதியில் தனது நண்பர்களுடன் டென்னிஸ் விளையாடிக்கொண்டிருந்தார். அப்போது இரவு 9:30 மணியளவில் அன்பரசன் திடீரென மயங்கி விழுந்தார்.உடன் அருகிலுள்ளவர்கள் மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். பெண்ணாடம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். நண்பர்களுடன் விளையாடியபோது வாலிபர் பரிதாபமாக இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி