உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / குட்கா விற்ற  இருவர் கைது

குட்கா விற்ற  இருவர் கைது

விருத்தாசலம்: பஸ் நிலைய பங்க் கடைகளில் குட்கா பொருட்களை விற்ற இருவரை போலீசார் கைது செய்தனர்.விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் சந்துரு தலைமையிலான போலீசார் நேற்று மாலை ரோந்து சென்றனர். அப்போது பஸ் நிலைய வளாகத்தில் உள்ள பங்க் கடைகளில் குட்கா விற்பது தெரிய வந்தது. இது தொடர்பாக சின்னவடவாடி சந்திரகாசி மகன் சிவக்குமார், 37, எருமனுார் சவுந்தரராஜன் மகன் முத்துக்குமரன், 32, ஆகியோரது கடைகளில் இருந்து தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.இது தொடர்பாக விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சிவக்குமார், முத்துக்குமரன் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ