மேலும் செய்திகள்
கால பைரவருக்கு அஷ்டமி வழிபாடு
12-Sep-2024
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் முன்பு, போதையில் சிறுநீர் கழித்த போலீஸ் ஏட்டு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் போலீஸ் ஸ்டேஷனில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் பாக்கியராஜ். இவர், நேற்று முன்தினம் இரவு போதையில், பைக்கில் விருத்தகிரீஸ்வரர் கோவில் பகுதிக்கு வந்துள்ளார். கோவில் கிழக்கு கோபுர வாயிலின் முன்பு, சாலையில் நடுவே பைக்கை நிறுத்தி விட்டு, அங்கேயே நின்று சிறுநீர் கழித்துள்ளார். அதன்பின், நிதானம் இழந்த அவர், கோவில் அருகே உள்ள நடைபாதை யில் படுத்துவிட்டார். இது சம்பந்தமான வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.இதையறிந்த, எஸ்.பி., ராஜாராம், விசாரணை நடத்தி, பாக்கியராஜை ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளார்.
12-Sep-2024