உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தாசில்தாரை மாற்றக்கோரி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம் 

தாசில்தாரை மாற்றக்கோரி வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம் 

புவனகிரி: புவனகிரி தாசில்தாரை பணியிட மாற்றம் செய்யக்கோரி, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.புவனகிரி தாலுகா அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு கோட்ட செயலாளர் அலெக்சாண்டர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் செந்தில்முருகன் வரவேற்றார். மாநில செயலாளர் விஸ்வநாதன் பேசினார். ஆர்ப்பாட்டத்தில், புவனகிரி தாசில்தாரின் கிராம நி்ர்வாக அலுவலர்களுக்கு எதிரான போக்கை கண்டித்து கோஷம் எழுப்பட்டது. மேலும், தாசில்தாரை மாற்றும் வரை தொடர் போராட்டம் நடத்துவது என முடிவு செய்துள்ளனர்.வட்ட செயலாளர் ஆனந்தபாபு நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி