உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சப்வே கேட்டு சிதம்பரம் அருகே கிராம மக்கள் மறியல்

சப்வே கேட்டு சிதம்பரம் அருகே கிராம மக்கள் மறியல்

பரங்கிப்பேட்டை : சிதம்பரம் அருகே நான்கு வழிச்சாலையில், சப்வே அமைத்துத்தரக்கோரி கிராம பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால், கடலுார்-சிதம்பரம் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.விழுப்புரம்-நாகை இடையே நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகிறது.இப்பணியில், பு.முட்லுார் அருகே தீர்த்தாம்பாளையம் கிராம சாலை வழியாக பாலம் அமைக்கப்படுவதால், தீர்த்தாம்பாளையம் கிராம பொதுமக்கள் நேரடியாக பு.முட்லுார் மெயின் ரோட்டிற்கு வந்து செல்லமுடியாத நிலை உள்ளது.எனவே, தீர்த்தாம்பளையத்தில் இருந்து பு.முட்லுார் செல்வதற்கு வசதியாக, சப்வே அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்த பிப்ரவரியில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், சப்வே அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதையடுத்து, கிராம சாலை அருகே சப்வேஅமைக்கும் பணி நடந்து வருகிறது.பள்ளமான இடத்தில் சப்வே அமைப்பதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கிவிடும், எனவே, கிராம சாலையிலேயே சப்வே அமைத்தரக்கோரி நேற்று மதியம் 3:30 மணியளவில் தீர்த்தாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த 300க்கும் மேற்பட்டோர், பு.முட்லுார் பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த, டி.எஸ்.பி., ரூபன்குமார், தாசில்தார் தனபதி மற்றும் பரங்கிப்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். நடவடிக்கை எடுப்பதாக கூறியதை தொடர்ந்து, மாலை 6;00 மணிக்கு மறியல் கைவிடப்பட்டது.இந்த மறியல் போராட்டத்தால், கடலுார் - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில், 2:30 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி