உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தெ ன்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தடுப்பு சுவர் பலவீனம்

தெ ன்பெண்ணை ஆற்றில் வெள்ளத்தடுப்பு சுவர் பலவீனம்

கர்நாடகா மாநிலத்தில் உருவாகும் தென்பெண்ணை ஆறு, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் வழியாக கடலுார் வங்காள விரிகுடா கடலில் கலக்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே கடலுார் மாவட்டம், மேல்பட்டாம்பாக்கம் மற்றும் விழுப்புரம் மாவட்டம், கலிஞ்சிக்குப்பம் ஆகிய கிராமங்களை இணைக்கும் வகையில் மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.இந்த மேம்பாலம் அருகே ஆற்றங்கரையோரத்தில் கான்கிரீட் மூலம் வெள்ளத்தடுப்பு சுவர் கட்டப்பட்டது.இந்த தடுப்பு சுவர், மண் அரிப்பு காரணமாக பலவீனமாகி, எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம் என்ற நிலையில் உள்ளது. அப்படி, தடுப்பு சுவர் இடிந்து விழுந்தால், தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் வரும்போது, கரை உடைந்து கிராமத்திற்குள் தண்ணீர் புகும் அபாயம் உள்ளது. இது மேல்பட்டாம்பாக்கம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராம பொதுமக்கள், விவசாயிகளிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை அதிகாரிகள், ஆய்வு செய்து தடுப்பு சுவரை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை