உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

மரச்சாகுபடி தொழில் நுட்ப பயிற்சி

விருத்தாசலம் : விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலையத்தில், கோவைவனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம்மற்றும் வேளாண் அறிவியல் நிலையம் சார்பில், மரச்சாகுபடி தொழில் நுட்பங்கள் குறித்த பயிற்சி நடத்தது.திட்ட ஒருங்கிணைப்பாளர் நடராஜன் தலைமை தாங்கினார். வனமரபியல் நிலைய அதிகாரி மாதவராஜ், வனமரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம் குறித்தும், பயிற்சியின் நோக்கம் குறித்து பேசினார்.பேராசிரியர்கள் சுகுமாறன், மோதிலால், கண்ணன், காயத்ரி ஆகியோர் மரம் நடுதலின் அவசியம் குறித்து பேசினர்.வன மரபியல் நிலையத்தின் முதுநிலை விஞ்ஞானி ஞானவேல், சவுக்கு மரம், தேக்கு மரம், புளிய மரம், செஞ்சந்தனம், மகோகனி மரம் வளர்ப்பு குறித்து விளக்கி பேசினார்.மேலும், இம்மரங்களின் வகைகள் வளர்ப்பு முறைகள், தரமான நாற்றுகள் தேர்வு செய்தல், உரமிடுதல், நோய் மற்றும் பூச்சி கட்டுப்பாடு, பயன்கள் மற்றும் சந்தைப் படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார்.இதில், விவசாயிகள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ