உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை; கண்டமங்கலம் அருகே பயங்கரம்

கோஷ்டி மோதலில் வாலிபர் கொலை; கண்டமங்கலம் அருகே பயங்கரம்

கண்டமங்கலம் : கண்டமங்கலம் அருகே பைக் மோதிய விபத்து தொடர்பாக ஏற்பட்ட கோஷ்டி மோதலில் படுகாயமடைந்த வாலிபர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.கண்டமங்கலம் அடுத்த மிட்டாமண்டகப்பட்டு பழைய காலனியை சேர்ந்தவர் வீரப்பன் மகன் கோபாலகிருஷ்ணன்,29; அதே பகுதியை சேர்ந்தவர் சாமிநாதன் மகன் அஜித்குமார்,24; கடந்த 10ம் தேதி மாலை கோபாலகிருஷ்ணன் தரப்பினர் ஓட்டிச்சென்ற பைக் அஜித்குமார் மீது மோதியது.இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 11ம் தேதி இருதரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கோபாலகிருஷ்ணன் தாக்கியதில் தலையில் படுகாயமடைந்த , அஜித்குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.இதுகுறித்து கண்டமங்கலம் போலீசார் வழக்கு பதிந்து கோபாலகிருஷ்ணனை கைது செய்து, விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். அவர் கடந்த 19ம் தேதி ஜாமினில் வெளியே வந்தார்.இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அஜித்குமார் சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார்.அதன்பேரில் போலீசார் ஏற்கனவே பதிவு செய்த மோதல் வழக்கை கொலை வழக்காக மாற்றம் செய்து கோபாலகிருஷ்ணனை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை