மேலும் செய்திகள்
கதண்டு கடித்து பெண் சாவு
03-Nov-2024
விருத்தாசலம், : விருத்தாசலம் அருகே கதண்டு கடித்து மாணவர்கள் உட்பட பத்து பேர் காயமடைந்தனர்.கடலுார் மாவட்டம், விருத்தாசலம் அடுத்த டி.வி.புத்துார் கிராமத்தில், வெள்ளாற்றங்கரையில் உள்ள மயான பாதையை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அங்குள்ள பனைமரத்தில் கதண்டு எனப்படும் விஷ வண்டுகள் கூடு கட்டியிருந்தன.நேற்று முன்தினம் காலை காற்று பலமாக வீசியதால், கூண்டிலிருந்து வெளியே வந்த கதண்டுகள், அவ்வழியே சென்ற பள்ளி மாணவர்கள் உட்பட பத்து பேரை கடித்தன. காயமடைந்தவர்கள், அருகில் உள்ள கருவேப்பிலங்குறிச்சி ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். பனை மரத்தில் உள்ள கதண்டு கூட்டை தீயணைப்புத்துறையினர் அழிக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
03-Nov-2024