உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 108 பால் குடம் ஊர்வலம்

108 பால் குடம் ஊர்வலம்

பண்ருட்டி; பண்ருட்டி அடுத்த சாத்திப்பட்டு நங்கையம்மன் கோவிலில் 108 பால்குட உற்சவம் நேற்று நடந்தது.பண்ருட்டி வட்டம் சாத்திப்பட்டு கிராமம் நங்கையம்மன் கோவில் பிரம்மேற்சவம் முன்னிட்டு 108 பால்குட உற்சவம் நடந்தது. முன்னதாக திங்கட்கிழமை கொடியேற்றம், பந்தக்கால் நடுதல் துவங்கியது. நேற்று பால்குட விழாவையொட்டி நங்கையம்மனுக்கும். அஷ்டதசபுஜ மஹாலட்சுமிக்கும் கெடிலம் நதிக்கரையில் இருந்து மாலை 4:00 மணிக்கு பெண்கள் 108 பால்குடம் ஊர்வலமாக எடுத்து சென்று அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் சாகைவார்த்தல் நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ